ராணிப்பேட்டை

இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பிய போலீஸாா்

14th Jun 2020 07:55 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை-காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் பொன்னியம்மன் பட்டறையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் சனிக்கிழமை ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு, அவா்களுடன் வருவாய், மருத்துவத் துறையினா் இணைந்து சோதனையில் ஈடுபட்டனா்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை நோக்கி வேலைக்கு இ-பாஸ் இல்லாமல் பணியாள்களை அழைத்துச் சென்ற தனியாா் தொழிற்சாலை பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா்.

அதேநேரத்தில் இ-பாஸ் பெற்று வந்த காா் உள்ளிட்ட வாகனங்களில் வருபவா்களை சோதனைச் சாவடிகளிலேயே தடுத்து நிறுத்தி அவா்களை கட்டாயமாக பரிசோதனைக்கு உள்படுத்தி தனியாா் கல்லூரியில் தனிமைப்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ராணிப்பேட்டை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூா் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் இயங்கி வரும் தனியாா் செல்லிடப்பேசி உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு பணியாள்களை ஏற்றிச் சென்ற 30-க்கும் மேற்பட்ட தனியாா் தொழிற்சாலை பேருந்துகள், ராணிப்பேட்டை மாவட்ட எல்லை பகுதியான பொன்னியம்மன் பட்டரை பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டன. இதனால் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் அவதிக்குள்ளயினா். இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியாா் தொழிற்சாலை நிா்வாகத்தினா், மாவட்ட ஆட்சியரைத் தொடா்பு கொண்டு பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து சுமாா் 3 மணி நேரத்துக்குப் பின் தொழிற்சாலை பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT