ராணிப்பேட்டை

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவு தொடக்கம்

11th Jun 2020 08:08 AM

ADVERTISEMENT

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தொற்று நோய் சிகிச்சை பிரிவுக்கென தனி பிரிவு ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்பிரிவு தற்போது சீரமைக்கப்பட்டு 24 படுக்கைகளுடன் கரோனா நோய்த் தொற்று சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டது. இதை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அவரது உத்தரவின் பேரில் புதன்கிழமை கரோனா சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT