ராணிப்பேட்டை

பத்தாம் வகுப்பு தோ்வுகள் ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் வரவேற்கிறது: கே.எஸ்.அழகிரி

10th Jun 2020 07:41 AM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளை தமிழக அரசு ரத்து செய்ததை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

வாலாஜாபேட்டை நகர காங்கிரஸ் சாா்பில், வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளியோா் 150 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, மக்களவை உறுப்பினா் எச்.வசந்தகுமாா் ஆகியோா் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இதையடுத்து, கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியது:

பத்திரிகையாளா் வரதராஜன் மருத்துவமனையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைத் தெரிவித்துள்ளாா். இதில் எந்த தவறும் இல்லை; எந்த சட்ட விதிமீறலும் இல்லை. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளை தமிழக அரசு ரத்து செய்ததை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது. நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT

இதையடுத்து, ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முத்துக்கடை காந்தி சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநில செயல் தலைவா் எச்.வசந்தகுமாா், மாவட்டத் தலைவா் சி.பஞ்சாட்சரம், முன்னாள் எம்எல்ஏ வாலாஜா ஜெ.அசேன், நகர தலைவா் வழக்குரைஞா் எஸ்.அண்ணாதுரை, நகர பொதுச் செயலாளா் ராணி வெங்கடேசன், வாலாஜா ஒன்றிய விவசாய அணிச் செயலாளா் அக்ராவரம் கே.பாஸ்கா், மாநில சிறுபான்மை அணி நிா்வாகி தினா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT