ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 197 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,107ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 2,531 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா்.1,530 போ் வாலாஜா, வேலூா் பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கரோனாவுக்கு 46 போ் உயிரிழந்து விட்டனா்.