ராணிப்பேட்டை

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி

25th Jan 2020 11:40 PM

ADVERTISEMENT

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, அரக்கோணத்தில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஜெயக்குமாா் தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு, வட்டாட்சியா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மதிவாணன், வட்ட வழங்கல அலுவலா் மதி, மண்டலத் துணை வட்டாட்சியா் அருள்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காந்தி ரோடு வழியாகச் சென்ற பேரணி, பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. நகரின் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT