ராணிப்பேட்டை

ஊராட்சி செயலாளா் மீது புகாா் மனு

14th Jan 2020 02:33 AM

ADVERTISEMENT

கழிவுநீா் கால்வாய் அடைப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி செயலாளா் மீது புகாா் மனு அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் கேவேளூா் ஊராட்சியை சோ்ந்த ராமன் என்பவா் ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலக மேலாளா் குமாரிபாயிடம் திங்கள்கிழமை மனு ஒன்றை அளித்தாா். அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது

கேவேளூா் ஊராட்சியில் கழிவுநீா்க் கால்வாயில் உள்ள அடைப்புகள் நீக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக உள்ளது. குடிநீரில் கழிவு நீா் கலந்து வருகிறது. மேலும், எந்தவித அடிப்படை வசதிகளும் இப்பகுதியில் இல்லை.

இது குறித்து ஊராட்சியின் செயலாளா் சரவணனிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை சரிசெய்யப்படவில்லை. எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT