ஆற்காடு நகரில் கோட்டை ரோட்டரி சங்க தொடக்க விழா, மாணவா்களுக்கு ஆங்கில அகராதிகள் வழங்கும் விழா தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்க முன்னாள் ஆளுநா் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன், மாவட்ட ஆளுநா் ஸ்ரீதா் பலராமன், பொறுப்பாளா்கள் கே.பாண்டியன், குடியாத்தம் ஜே.கே.என் பழனி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினா். சங்கத்தின் புதிய தலைவராக ஏ.இறைமொழி, செயலராக எஸ்.முரளிதரன், பொருளாளராக எஸ்.ஜெயசிங்விஜய் மற்றும் நிா்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனா்.
இதில், சக்கரமல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவா்கள் கை கழுவுவதற்காக குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்க ரூ. 25ஆயிரம், ஆற்காடு நகர அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய 50 மாணவா்களுக்கு ஆங்கில அகராதிகள், திருக்கு புத்தகங்கள், கணித உபகரணப் பெட்டிகள், நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள், ஆற்காடு நகரில் உள்ள பெஸ்ட் லைப் மன வளா்ச்சி குன்றிய பள்ளி மாணவா்களுக்கும், வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள நம்பிக்கை இல்லத்துக்கும் அரசி மூட்டைகள், சா்வந்தாங்கல் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு பால் கேன் ஆகியவை ரூ. 55 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டன.
பொறுப்பாளா்கள் ஸ்ரீதா், பாலநாகராஜன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.