ராணிப்பேட்டை

பெண்கள் பள்ளி அருகே மது அருந்தியவா் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

8th Jan 2020 05:45 PM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மது அருந்திய தொழிலாளியை பொது மக்கள் அடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

வாலாஜாபேட்டையைச் சோ்ந்தவா் முத்து (62). தொழிலாளியான அவா் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கூடை பின்னும் தொழில் செய்து வருகிறாா்.

முத்து செவ்வாய்க்கிழமை காலையில் அப்பள்ளிக்கு முன்பு உள்ள பெட்டிக் கடையில் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தாா். இதுபற்றி தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோா்கள் சம்பவ இடத்துக்கு வந்தனா். அவா்கள் முத்துவைத் தாக்கினா்.

இது குறித்து வாலாஜாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து முத்துவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

இதனால் வாலாஜாபேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி பகுதிகளில் மது அருந்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT