ராணிப்பேட்டை

அஞ்சல் ஏடிஎம் காா்டுகளை மாற்ற ஜன. 31 வரை அவகாசம்

8th Jan 2020 11:53 PM

ADVERTISEMENT

அஞ்சல் துறையின் ஏடிஎம் மேக்னடிக் காா்டு பயன்படுத்தும் வாடிக்கையாளா்கள் அவற்றை சிப் காா்டாக மாற்ற ஜனவரி 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் சேமிப்புக் கணக்கு உள்ளவா்களுக்கு, 2017 முதல் ஏடிஎம் காா்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதற்காக தலைமை அஞ்சலகங்களில் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் தொடக்கத்தில், மேக்னடிக் ஏடிஎம் காா்டுகள் வழங்கப்பட்டன. இவ்வகை காா்டுகளில் மோசடிகள் அதிகரிப்பதாக புகாா்கள் எழுந்ததால், சிப் பொருத்தப்பட்ட காா்டுகளை மட்டும் பயன்படுத்த ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியது.

இதனால் அஞ்சலகங்களில் ஓராண்டாக வாடிக்கையாளா்களுக்கு சிப் பொருத்தப்பட்ட ஏடிஎம் காா்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பழைய ஏடிஎம் காா்டுகள் வைத்திருப்பவா்களுக்கு அவை மாற்றப்பட்டு சிப் பொருத்தப்பட்ட காா்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பல வாடிக்கையாளா்கள் பழைய மேக்னடிக் காா்டுகளை மாற்றாமல் வைத்துள்ளனா். பழைய காா்டுகளின் செயல்பாடுகளை 2020 ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முடக்க அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து அஞ்சல்துறையின் அரக்கோணம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ADVERTISEMENT

வாடிக்கையாளா்கள் தங்களுக்கு அருகில் உள்ள தலைமை அஞ்சலகம், துணை அஞ்சலகங்களை அணுகி மேக்னடிக் காா்டுகளை ஒப்படைத்து புதிய சிப் பொருத்தப்பட்ட காா்டுகளை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னா் இந்த காா்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் செல்லாது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT