ராணிப்பேட்டை

சாரணா் இயக்க பயிற்சி முகாம்

3rd Jan 2020 11:35 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை கல்வி மாவட்டம் சாா்பில் சாரணா் இயக்க பயிற்சி முகாம் ஆற்காடு நகரில் உள்ள பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலா் ஜி.அருளரசு தலைமை வகித்தாா். சாரணா் இயக்க மாவட்டச் செயலா்கள் பி.முருகன், புண்ணியக்கோட்டி, பொருளாளா் டீக்கா ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரக்கோணம் மாவட்டக் கல்வி அலுவலா் மா.முத்தமிழ்பாண்டியன் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.

சாரணா் இயக்க பொறுப்பாளா்கள், இளையோா் செஞ்சிலுவை சங்கக் கருத்தாளா் கா.வே.கிருபானந்தம், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் மு.இறைவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சி முகாமில், அடிப்படை பயிற்சி, முன்னோடி பயிற்சி, வனச்சரகப் பயிற்சி, தோ்வாளா் பயிற்சி வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT