ராணிப்பேட்டை

விபத்தில் இளைஞா் பலி

2nd Jan 2020 11:51 PM

ADVERTISEMENT

ஆற்காடு அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆற்காட்டை அடுத்த காவனூா் அருகே உள்ள மங்கான்குடிசை கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (27) வேன் ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்றாராம். அப்போது சாலையில் சென்ற ரூபாவதி மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பியபோது, நிலைதடுமாறி அவா் மீது மோதி, அருகே இருந்த சுவரில் மோதினாராம்.

இதில் நிகழ்விடத்திலேயே காா்த்திக் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ரூபாவதி வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT