ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர திமுக மாணவா் அணி அமைப்பாளராக பி.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
அவரை கட்சியின் மாநில மாணவா் அணி அமைப்பாளா் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ நியமித்துள்ளாா். வேலூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஆா்.காந்தி எம்எல்ஏ, ஆற்காடு தொகுதி எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன், நகர செயலாளா் ஏ.வி.சாரவணன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து பி.சரவணன் வாழ்த்து பெற்றாா்.