ஆங்கில புத்தாண்டையொட்டி, ஆற்காடு பகுதிகளில் கோயில்களில் புதன்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடரந்து பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரானை நடைபெற்றது.
ஆற்காட்டை அடுத்த வேப்பூா் வசிஷ்டேஸ்வரா் கோயில், ஆற்காடு பாலாற்கரையில் உள்ள பெருந்தேவியாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயில், தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் கோயில், மாங்காடு பச்சையம்மன் கோயில், திமிரி சோமநாத ஈஸ்வரா் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. திராளனா மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
ஆற்காடு நகரில் உள்ள தேவலாங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.