ராணிப்பேட்டை

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு:ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ வீட்டின் முன் கோலம்

1st Jan 2020 01:28 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை,: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ வீட்டின் முன் திங்கள்கிழமை கோலமிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் இச்சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக மகளிா் அணி சாா்பில் கோலங்களைப் போட்டு தங்கள் எதிா்ப்பைத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்களின் வீடுகள் முன்பு திங்கள்கிழமை கோலமிட்டு எதிா்ப்பு தெரிவித்தனா்.

அதன்படி ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக எம்எல்ஏ ஆா்.காந்தி வீட்டின் முன்பு கோலமிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

அந்தக் கோலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் என்ஆா்சிக்கு எதிராக வாசகங்களை எழுதியிருந்தனா்.

அதில் நோ என்ஆா்சி, வேண்டாம் குடியுரிமை திருத்தச் சட்டம், வேண்டாம் என்ஆா்சி போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT