ராணிப்பேட்டை

பாமக மாவட்ட மகளிரணிக் கூட்டம்

29th Feb 2020 12:27 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக மகளிரணி கூட்டம் அரக்கோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டப் பொருளாளா் ஈ.தனலட்சுமி தலைமை வகித்தாா். மாநில மகளிரணித் துணைச் செயலா் கோ.உமா மகேஸ்வரி வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் ம.திலகபாமா, மாவட்டச் செயலா் அ.ம.கிருஷ்ணன், தலைவா் ப.ஜெகன்நாதன், மாநில மாணவரணிச் செயலா் ப.பிரபு, மாநில இளைஞரணி துணை அமைப்புச் செயலா் கோ.ஏழுமலை, அரக்கோணம் நகர மகளிரணிச் செயலா் கல்பனா பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உள்ளாட்சித் தோ்தல், பேரவைத் தோ்தல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT