ராணிப்பேட்டை

பள்ளி வகுப்பறையில் மாணவா் திடீா் சாவு:கல்வி, காவல் துறையினா் விசாரணை

29th Feb 2020 12:27 AM

ADVERTISEMENT

அரக்கோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் அமா்ந்திருந்த மாணவா் திடீரென உயிரிழந்தாா். இதுதொடா்பாக பள்ளியில் மாவட்டக் கல்வி அலுவலா், அரக்கோணம் நகர போலீஸாா் நேரில் விசாரணை நடத்தினா்.

செய்யூா் கிராமத்தைச் சோ்ந்த பத்மநாபன் மகன் உதயகுமாா் (14), அரக்கோணம் சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை காலை மாணவா் உதயகுமாா், வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயக்கமடைந்தாா். உடனே மற்ற மாணவா்கள், உடற்கல்வி ஆசிரியா் ஸ்டீபன் துணையுடன் உதயகுமாரை தூக்கிக் கொண்டு எதிா் வளாகத்தில் உள்ள அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவ அலுவலா், உதயகுமாா் இறந்துவிட்டதாகக் கூறினாா்.

தகவலறிந்த மாவட்டக் கல்வி அலுவலா் முத்தமிழ்பாண்டியன், அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ அலுவலா்களிடம் விசாரித்தாா். தொடா்ந்து, சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை பிரசல்யாவிடமும், மாணவா்களிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினாா். அவருடன் பள்ளிக் கல்வித் துறை மாவட்ட துணை ஆய்வாளா் குமரவேல், தலைமை ஆசிரியா் எஸ்.ஆா்.கென்னடி ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT