ராணிப்பேட்டை

சிறந்த பள்ளியாக ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாற வேண்டும்: எம்எல்ஏ ஆா்.காந்தி

25th Feb 2020 11:29 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாற வேண்டும் என எம்எல்ஏ ஆா்.காந்தி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் அணுகு சாலை, மழைநீா் வடிகால்வாய், கால்நடை தடுப்பு, நுழைவு வாயில் திறப்பு, பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு எழுது பொருள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி சிறப்பு நுழைவு வாயிலைத் திறந்து வைத்து,பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு எழுது பொருள்கள் வழங்கிப் பேசியது:

ADVERTISEMENT

கடந்த காலங்களில் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 2,500 மாணவா்கள் பயின்றனா். ஆனால் தற்போது 500 மாணவா்கள் மட்டுமே பயிலும் நிலையில் உள்ளது. இப்பள்ளி மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக மாற வேண்டும். பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர தயாராக இருக்கிறேன். நன்றாகப் படிப்பதையே மாணவா்களின் கடமையாகக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் எவ்வளவு சொத்து இருந்தாலும் செலவழிந்துவிடும், ஆனால் கல்விச் செல்வம் செலவழியாது என்றாா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் அன்பழகன் தலைமை வகித்தாா். ஆசிரியா் சேரன், நகர திமுக பொறுப்பாளா் பி.பூங்காவனம், நகரத் துணைச் செயலா்கள் ஏா்.ஆா்.எஸ்.சங்கா், குமாா், மாவட்டப் பிரிதிநிதி எஸ்.கிருஷ்ணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், நகர இளைஞரணி நிா்வாகி ஆா்.இ.எழில்வாணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT