ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் உலக நன்மை வேண்டி மகா நிகும்பலா யாகம்

23rd Feb 2020 11:48 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை,பிப்: ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் அமைந்துள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் மாசி மாத அமாவாசையையொட்டி உலக நன்மை, மழை வேண்டி மகா நிகும்பலா யாகம் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.இக்கோயில் பீடாதிபதி பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில் இரவு 7 மணியளவில் கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்கியது.தொடா்ந்து மகா சண்டி யாகம், மகா வராஹி யாகம், பகளாமுகி யாகம், சுதா்ஸன யாகம் உள்ளிட்ட 21 வகையான யாகங்கள் நடைபெற்றன.

இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் உலக நன்மை, மழை வேண்டியும், உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதல் நீங்க வேண்டியும் மிளகாய் வற்றல்,வெண்கடுகு, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட யாக பூஜைப் பொருட்களைக் கொண்டு மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.பின்னா் புனித நீா் கலசப் புறப்பாடும், மகா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.தொடா்ந்து பக்தா்களுக்கு புனித நீா், குங்குமம் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. இதில் ராணிப்பேட்டை சுற்றுவட்டாரம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம், புதுவை உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.படம் உண்டு..

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT