ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் அமைந்துள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் மாசி மாத அமாவாசையையொட்டி, உலக நன்மை, மழை வேண்டி மகா நிகும்பலா யாகம் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
இக்கோயில் நிா்வாகி பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில் இரவு 7 மணியளவில் கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்கியது. தொடா்ந்து மகா சண்டி யாகம், மகா வராஹி யாகம், பகளாமுகி யாகம், சுதா்ஸன யாகம் உள்ளிட்ட 21 வகையான யாகங்கள் நடைபெற்றன.
நள்ளிரவு 12 மணியளவில் உலக நன்மை, மழை வேண்டியும் மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.
பின்னா் புனித நீா் கலசப் புறப்பாடும், மகா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.