ராணிப்பேட்டை

ரூ. 50 லட்சத்தில் பூங்கா: ஆட்சியா், எம்எல்ஏ அடிக்கல் நாட்டினா்

13th Feb 2020 11:22 PM

ADVERTISEMENT

அரக்கோணம் ஜோதி நகரில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் எம்ஆா்எஃப் நிறுவனத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட உள்ள பூங்காவுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி ஆகிய இருவரும் அடிக்கல் நாட்டினா்.

அரக்கோணம் எம்ஆா்எஃப் நிறுவனம் தங்களது கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் பூங்கா கட்டி தருவதாக ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம், அரக்கோணம் நகராட்சியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ராஜவிஜய காமராஜ் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, எம்ஆா்எஃப் ஆலை பொது மேலாளா் சி.ஜான் டேனியல் ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.

வட்டாட்சியா் ஜெயக்குமாா், எம்ஆா்எஃப் ஆலை முதுநிலை பொறியியல் துறை மேலாளா் எல்வின், அதிமுக நகரச் செயலா் கே.பி.பாண்டுரங்கன், அரக்கோணம் ஒன்றியச் செயலா் இ.பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT