ராணிப்பேட்டை

குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாம் ஆட்சியா் தொடக்கி வைப்பு

13th Feb 2020 11:05 PM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை அருகே நடைபெற்ற குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாமை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தொடக்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாயமான குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், பாலியல் ரீதியாக துன்பப்படும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளா்கள், குழந்தைத் திருணமங்கள், உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஆதரவளிக்க சைல்டு லைன் 1098 என்ற திட்டம், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரை தலைமையில் செயல்பட்டு வருகிறது.

மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இத்திட்டமானது, ஹேண்ட் இன் ஹேண்ட் என்ற இந்திய தொண்டு நிறுவனத்தைக் கூட்டு நிறுவனமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பைரா காலனியில் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒரே நாளில் 3 சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுவதாக சைல்ட் லைன் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் வநத்து. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற சைல்ட் லைன் அமைப்பினா், வருவாய்த் துறையினா் உடனடியாக திருமணத்தைத் தடுத்தி நிறுத்தினா். இதையடுத்து அப்பகுதியில் குழந்தைத் திருமணம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அதன்பேரில் ஜோசியம் சொல்லும் மக்கள் வசிக்கும் பைரா காலனியில் குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தொடக்கி வைத்து 1098 என்ற இலவச சைல்ட் லைன் உதவி எண் பலகையை திறந்து வைத்துப் பேசினாா்.

ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத், சைல்ட் லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தேவேந்திரன், முதன்மை மேலாளா் ப.மேகனவேல், மாவட்ட சமூக நல அலுவலா் ப.முருகேஸ்வரி, வாலாஜாபேட்டை வட்டாட்சியா் பாலாஜி, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ம.நிஷாந்தினி, அம்மூா் பேரூராட்சி செயல் அலுவலா் கெ.ரேவதி, பைரா காலனி ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT