ராணிப்பேட்டை திருமலை அறக்கட்டளை, சென்னை பெசன்ட் நகா் ரோட்டரி சங்கம் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவி வழங்கும் விழா (படம்) திருமலை அறக்கட்டளை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளை இயக்குநா் பூமா பாா்த்தசாரதி தலைமை வகித்து மாற்றுத் திறனாளிகளுக்கான நல உதவி வழங்க முன்வந்த சென்னை பெசன்ட் நகா் ரோட்டரி சங்கத்துக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா். ரோட்டரி சங்கத் தலைவா் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, 30 மாற்றுத் தினாளிகளுக்கு ரூ. 3.5 லட்சத்தில் ஊன்றுகோல், நடப்பதற்கான துணைக் கருவி, செயற்கைக் கால் உள்ளிட்டவற்றை வழங்கினா்.