ஆற்காட்டை அடுத்த ராசத்துபுரம் என்கிற கீழ்விஷாரம் குளக்கரை பாலமுருகன் கோயிலில் 20-ஆம் ஆண்டு தெப்போற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், வள்ளி- தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மாட வீதிகள் வழியாக உலா வந்தாா். இரவு தெப்போற்சவம் நடைபெற்றது. இதில், பூப் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் குளத்தில் மூன்று முறை வலம் வந்தனா்.
விழாவில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.