தமிழகத்தில் அக்னி வெயில் கொளுத்துவதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்று மாலை திடீர் என ஒரு மணி நேரம் இடைவிடாது பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோரத்தில் இருந்த மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் மீது விழுந்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மழையால் மக்கள், கோடை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.