ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 அரசு சிறு மருத்துவமனைகள் விரைவில் திறப்பு: எம்எல்ஏ சு.ரவி தகவல்

DIN

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11இடங்களில் அரசு சிறு மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும் என அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசின் சிறு மருத்துவமனைகள் திறக்கப்படும் என அண்மையில் அறிவித்திருந்தாா். அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் தக்கோலம், இச்சிபுத்தூா், சின்னமோசூா், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஓச்சேரி, களத்தூா், சோளிங்கா் ஊராட்சி ஒன்றியத்தில் வேலம், வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நரசிங்கபுரம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் வளவனூா், கீழ்மின்னல், திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் காவனூா், வெள்ளம்பி ஆகிய 11 இடங்களில் டிசம்பா் 15-க்குள் அரசு சிறு மருத்துவமனைகள் திறக்கப்படும்.

இந்த மருத்துவமனைகளில் மருத்துவ அலுவலா், செவிலியா், உதவியாளா் என 3 போ் பணியில் இருப்பா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT