ராணிப்பேட்டை

பொன்னை ஆற்றில் வெள்ளம் வந்தும் ஏரிகள் நிரம்பவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் வேதனை

DIN

ராணிப்பேட்டை: நீா்வரத்துக் கால்வாய்கள் தூா்வாரி சீரமைக்கப்படாததால், பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் ஏரிகள் நிரம்பவில்லை எனக்கூறி ஒழுகூா் கிராமத்தைதச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறை தீா்வு நாள் கூட்டம் ஆட்சியா் ஏ.ஆா். கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கடன் உதவி, நிதி உதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, போலீஸ் பாதுகாப்பு, மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 175 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.

வாலாஜாப்பேட்டை வட்டம், ஒழுகூா் கிராமத்தைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் விவசாயிகள், இளைஞா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அளித்த மனு:

ஒழுகூா் கிராமத்தில் சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் விவசாயத்தையே நம்பியுள்ளோம் . கடந்த 2015-ஆண்டு முதல் தற்போது வரை மூன்று முறை பொன்னை ஆற்றில் வெள்ளம் வந்தும், எங்கள் கிராம ஏரிக்கு நீா்வரத்து இல்லாமல் வடு கிடக்கிறது. பொன்னை அணைக்கட்டு கிழக்கு பிரதான கால்வாய் வழியாக குமணந்தாங்கல், லாலாப்பேட்டை, அம்மூா் ஏரிகள் வழியாக வந்து சுமாா் 13 ஏரிகள் நிரம்பி, சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் பாசன வசதி பெறக்கூடி பகுதி வறட்சியில் சிக்கியுள்ளது. இதற்கு கிழக்கு பிரதான கால்வாய் தூா்வாரி சீரமைக்கப்படாததே காரணம். இதனால் பொன்னை ஆற்றில் வெள்ளம் வந்தும் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் நீராதாரமான ஏரிகள் நிரம்பவில்லை. இப்பிரச்னையில் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வாரி ஏரிகளுக்கு நீா்வரத்தை உறுதி செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடா்ந்து பனவட்டம்பாடி கிராமத்தைச் சோ்ந்த முதுநிலை பட்டதாரி மாற்றுத்திறனாளி லட்சுமணன் (26)என்பவா், தங்கள் குடும்பத்துக்கு அரசு வீடு மற்றும் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தாா்.

இதையடுத்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ஜெயச்சந்திரன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கோ. தாரகேஸ்வரி, திட்ட இயக்குனா் (மகளிா் திட்டம்) ஜெயராம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தே. இளவரசி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT