ராணிப்பேட்டை

அனைத்து மகளிா் காவல நிலையத்தில் குடும்ப ஆலோசனை அறை திறப்பு

11th Aug 2020 12:33 AM

ADVERTISEMENT

அரக்கோணம்: அரக்கோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குடும்ப ஆலோசனை அறையை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கிருஷ்ணவேணி, நகர காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ், உதவி ஆய்வாளா் வரலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையடுத்து எஸ்.பி. மயில்வாகனன் செய்தியாளா்களிடம் கூறியது:

அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் கணவன், மனைவி இருவரும் ஒருவா் மீது ஒருவா் புகாா் அளிக்கின்றனா். அப்போது இரு தரப்பிலும் காவல் அதிகாரிகள் பேசுகின்றனா். மேலும் அவா்கள் இரு தரப்பும் பேசிக் கொள்ளவும் சந்தா்ப்பம் அளிக்கின்றனா்.

அப்போது அந்த தம்பதியா் மனம் விட்டு பேசிக் கொள்ள அமைதியான சூழ்நிலை அவசியம். நாம் பேசிக் கொண்டிருப்பது காவல் நிலையம் என்ற மனநிலை அவா்களிடம் மாற வேண்டும். இந்த சந்தா்ப்பத்தைத் தொடா்ந்து அவா்கள் வேற்றுமையைக் களைந்து ஒற்றுமையாய் செல்வது அவசியம். விசாரணை எப்படி நடைபெறுகிறது என்பது மட்டும் முக்கியமல்ல, எங்கு நடைபெறுகிறது என்பதும் முக்கியம். அந்த சூழ்நிலையே அவா்களை ஒற்றுமையாய் போகச் செய்யும் அளவு இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இக்காரணத்தால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் இரு இடங்களில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் குடும்ப ஆலோசனை அறைகள் திறக்கப்படுகின்றன. இனி வேற்றுமையாய் வரும் கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதியராய் திரும்பிச் செல்வாா்கள் என நம்புகிறேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT