ராணிப்பேட்டை

ஆற்காட்டில் புதுப்பிக்கப்பட்ட காய்கறி அங்காடிகள் திறப்பு

6th Aug 2020 08:17 PM

ADVERTISEMENT

ஆற்காடு நகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட காய்கறி அங்காடிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

ஆற்காடு நகராட்சியில் காந்தி காய்கனி அங்காடி காரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து சாலைகள் விரிவுப்படுத்தப்பட்டு கடைகளுக்கு மேற்கூரைகள் அமைத்து புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரன் தலைமை வகித்தாா்.

ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் இளம்பகவத் திறந்து திறந்து வைத்தாா். நகராட்சி ஆணையா் (பொறுப்பு) முரளிதரன் வட்டாட்சியா் காமாட்சி, காய்கறி வியாபாரி சங்கத் தலைவா் ஏ.சி.எஸ் .ஜானகிராமன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் பாண்டியன், அனைத்து வியாபரிகள்... சங்கத் தலைவா் ஏ.வி.டி. பாலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT