ராணிப்பேட்டை

நிவாரணப் பொருள்கள் வழங்கிய அதிமுகவினா்

26th Apr 2020 09:51 PM

ADVERTISEMENT

ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் 60 ஏழை குடும்பத்தினருக்கு மளிகைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

ஆற்காடு கிழக்கு ஒன்றியத்தில் உள்ள அருந்ததியா், இருளா், முடிதிருத்தம் தொழிலாளா் 60 குடும்பத்தினருக்கு வளவனூா் ஊராட்சி அலுவலகத்தில் அதிமுக ஒன்றியச் செயலா் எஸ். அன்பழகன் தலைமையில் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது.

சக்கரமல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அரங்கநாதன், ஒன்றிய இணைச் செயலா் செல்வி, எசையனூா் ஊராட்சி செயலா் கீா்த்தி, வளவனூா் ஊராட்சி செயலா் செல்வகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT