ராணிப்பேட்டை

தொழிற்சாலைக்கு ‘சீல்’

26th Apr 2020 09:25 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று தடுப்புக்காக முகக்கவசம் தயாரிப்பதாக ஆட்சியரிடம் அனுமதி பெற்று, காலணி தயாரித்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சனிக்கிழமை சீல் வைத்தனா்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெற்ற அத்தியாவசியத் தொழிற்சாலைகள் மட்டும் குறைந்தபட்ச தொழிலாளா்களைக் கொண்டு இயங்கி வருகின்றன.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் செயல்பட்டுவந்து தனியாா் தொழிற்சாலை முகக்கவசம் தயாரிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றது. தெடா்ந்து, அந்தத் தொழிற்சாலையில் 10 பெண் தொழிலாளா்களை மட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் 40 பெண்கள் தொழிலாளா்களைக் கொண்டு காலணி தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச. திவ்யதா்ஷினி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை மூடி ‘சீல்’ வைக்கும்படி வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா். அதன்படி, வாலாஜாபேட்டை வட்டாட்சியா் பாலாஜி தலைமையிலான வருவாய்த் துறையினா் சனிக்கிழமை, அந்தத் தொழிற்சாலையை மூடி ‘சீல்’ வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT