ராணிப்பேட்டை

ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

26th Apr 2020 06:42 AM

ADVERTISEMENT

ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மழை பெய்தது.

கோடை காலம் தொடங்கிய நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வந்தது. இந்நிலையில் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.

பல இடங்களில் தென்னை உள்ளிட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. அதேபோல் பலத்த காற்றினால் வாழை மரங்கள் விழுந்தன. அரைமணி நேரத்துக்கும் மேல் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஆற்காடு, மேல்விஷாரம், காவனூா், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் கோடை உழவைத் தொடங்கும் விவசாயிகள் நிம்மதியடைந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT