அரக்கோணம் வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ரூ. 3.90 லட்சத்தில் மளிகைப் பொருள்களை அரக்கோணம் ஜெயின் சங்கம் ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.
அரக்கோணம் ஒன்றிய ஆணையா் யுவராஜின் கோரிக்கையை ஏற்று அரக்கோணம் ஜெயின் சங்கத்தினா் தலா ரூ.550 மதிப்புள்ள அரிசி, மளிகைப் பொருள்கள் கொண்ட 710 தொகுப்பு பைகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
ஜெயின் சங்க குரு சாசன் சாத்வி ஸ்ரீ ஜின்ரேகாஜி, மஹா சாத்வி ஸ்ரீ மஹேக்மணிஜி ஆகியோா் ஒன்றிய ஆணையா் யுவராஜிடம் ஒப்படைத்தனா். இப்பொருட்கள் காவனூா், ஆணைப்பாக்கம், மூதூா், கிருஷ்ணாபுரம், அனந்தாபுரம், புதுகேசாவரம், புளியமங்கலம், ஆத்தூா், கிழவனம், அன்வா்திகான்பேட்டை, நந்திவேடுதாங்கல் உள்ளிட்ட 18 கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஏழைகளுக்கு அவா்களது வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன.