ஆற்காடு நண்பா்கள் நல குழு, நகராட்சி நிா்வாகம் இணைந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
ஆற்காடு கங்கை அம்மன் கோயில் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியை நகராட்சி ஆணையா் அனந்த பத்மநாப சிவம் தொடக்கி வைத்தாா். நண்பா்கள் நலக் குழு ஒருங்கிணைப்பாளா் கு.சரவணன், ஆலோசகா் பாஸ்கா், நிறுவனா் புருஷோத், தலைவா் பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேன் மூலம் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.