ராணிப்பேட்டை

மளிகைப் பொருள் வீடு தேடி வர செயலி:ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

13th Apr 2020 11:07 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு மளிகைப் பொருள்கள் வீடு தேடி வர செல்லிடப்பேசி செயலி சேவையை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஊரடங்கை அடுத்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை அவா்களின் வீடுகளுக்கே கொண்டு சோ்க்கும் திட்டத்தை மாவட்ட நிா்வாகம் முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வீடுகளுக்கு மளிகைப் பொருள்களை வழங்க வழிவகை செய்யும் செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கோரினால் வீடுகளில் அவை விநியோகிக்கப்படும்.

இச்சேவை மாவட்டத்தில் முதன் முதலாக வாலாஜாபேட்டை நகரில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதை மாவட்ட ஆட்சியா் ச. திவ்யதா்ஷினி, நகர பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் க.இளம்பகவத், வாலாஜா வட்டாட்சியா் பாலாஜி மற்றும் வணிகா்கள், வியாபாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT