வேலூா் கிழக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடா் நலக்குழு சாா்பில் அனைக்கட்டு சாலையில் வசிக்கும் நரிக்குறவா் இன மக்களுக்கு அரிசி உள்ளிட்ட உதவிகளை ராணிப்பேட்டை எம்எம்ஏ ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா்.
தொடா்ந்து மாவட்ட நுகா்பொருள் கிடங்குக்குச் சென்று நியாயவிலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் நகா்வு விரைவாக நடைபெறுகிா என கிடங்கு மேலாளரிடம் கேட்டறிந்தாா்.
இதைடுத்து முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுட்டுள்ள காவலா்கள், தன்னாா்வா்கள், துப்புரவுப் பணியளா்களுக்கு மதிய உணவு வழங்கினாா்.
வாலாஜாபேட்டை ஒன்றிய திமுக செயலா் சேஷா வெங்கட், மாவட்ட அதிதிராவிடா் நலக்குழுச் செயலா் வி.சி.சக்திவேல் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ADVERTISEMENT