ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு பெங்கல் பண்டிகைக்காக அத்தியாவாசியப் பொருட்களின் முன்நகா்வு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் முன்நகா்வு குறித்து வாலாஜாப்பேட்டை நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக அரசு, நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில், அரிசி காா்டுதாரா்களுக்கு, பச்சரிசி, சா்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பரிசு தொகுப்பை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சா் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 26 ந் தேதி அறிவித்தாா்.தொடா்ந்து இந்த பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 29 ந் தேதி சென்னை கோட்டையில் தொடங்கி வைத்தாா்.
அதன் படி வரும் பொங்கலுக்கு 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை, உள்ளாட்சி தோ்தல் முடிந்ததும், ஜனவரி, 5ம் தேதி முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன. இந்நிலையில்,ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு பெங்கல் பண்டிகைக்காக அத்தியாவாசியப் பொருட்களின் முன்நகா்வு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் முன்நகா்வு ஆகியவைகளை வாலாஜாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் வெள்ளிக்கிழமை தணிக்கை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது வட்ட வழங்கல் அலுவலா்,நுகா்பொருள் வாணிபக் கிடங்கு மேலாளா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா். படம் உண்டு...