ராணிப்பேட்டை

நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

27th Dec 2019 10:44 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக அத்தியாவாசியப் பொருள்களின் முன்நகா்வு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள் குறித்து வாலாஜாபேட்டை நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக அரசு நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில், அரிசி அட்டைதாரா்களுக்கு, பச்சரிசி, சா்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, ரூ.1,000 ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த மாதம் 29 -ஆம் தேதி தொடக்கி வைத்தாா்.

அதன்படி, வரும் பொங்கலுக்கு பரிசுத் தொகுப்பை உள்ளாட்சித் தோ்தல் முடிந்ததும், ஜனவரி 5-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களின் முன்நகா்வு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள் முன்நகா்வு ஆகியவை குறித்து வாலாஜாபேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

வட்ட வழங்கல் அலுவலா், நுகா்பொருள் வாணிபக் கிடங்கு மேலாளா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT