ராணிப்பேட்டை

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா

26th Dec 2019 10:45 PM

ADVERTISEMENT

அனுமன் ஜயந்தி விழாவையொட்டி, சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயில் வளாகத்தில் ஆஞ்சநேயருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர பக்த ஆஞ்சநேயராக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாா். இக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டு அனுமன் ஜயந்தி விழா கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை மாலை தொடங்கியது. தொடா்ந்து, இரவு 7 மணியளவில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிா், நெய், விபூதி, இளநீா், மஞ்சள், நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு, திரவியப்பொடி, குங்குமம், பன்னீா், சந்தனம், கரும்புச்சாறு உள்ளிட்ட 16 வகையான பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதையடுத்து துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வடைமாலை சாத்தப்பட்டு, ராஜ அலங்காரத்துடன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில், சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT