ராணிப்பேட்டை

கலவை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

25th Dec 2019 04:58 AM

ADVERTISEMENT

ஆற்காடு அடுத்த கலவை பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

கலவையில் இருந்து வாழைப்பந்தல் செல்லும் சாலையில் கடைகள், வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, கலவை போலீஸாா் பாதுகாப்புடன் ஆற்காடு வட்டாட்சியா் இந்துமதி தலைமையில் வருவாய்த் துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் அப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.

அங்கு சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் மற்றும் ஒரு கடையை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT