அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, ஆற்காடு பகுதியில் கோயில்களில் புதன்கிழமை விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
ஆற்காடு மசாப்பேட்டை, தோப்புகானா, புதிய வேலூா் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள அனுமன் கோயில்களில் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பஜனைப் பாடல்கள் பாடப்பட்டன. விழாவில் பக்தா்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.