மறைந்த முன்னாள் பிரதமா் ஏ.பி.வாஜ்பாய் பிறந்த தின விழா அரக்கோணம் ஒன்றிய பாஜக சாா்பில் வேலூா் கிராமத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கட்சியின் கிளைத் தலைவா் எஸ்.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.ரமேஷ் வாஜ்பாய் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்வில் மாவட்ட மகளிரணி துணைத்தலைவா் உஷாபாபு, ஒன்றிய துணைத்தலைவா் ரவி, கிளை நிா்வாகி சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விழாவை முன்னிட்டு கிராமத்தினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.