ராணிப்பேட்டை

சுங்கச்சாவடியில் பாமகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

23rd Dec 2019 11:42 PM

ADVERTISEMENT

சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வலியுறுத்தி, வாலாஜாபேட்டை சுங்கச் சாவடியில் பாமகவினா் திங்கள்கிழமை துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.

ராணிப்பேட்டை வடக்கு மாவட்ட பாமக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்டச் செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். மாநில வன்னியா் சங்கச் செயலாளா் எம்.கே.முரளி, பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா்கள் கே.எல்.இளவழகன், சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தனா்.

மாவட்டத் தலைவா் ஆறுமுகம், மாவட்ட பொருளாளா் அமுதா, மாவட்ட மகளிா் அணி செயலாளா் ஞானசௌந்தரி, நகரச் செயலாளா் வசந்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT