ராணிப்பேட்டை

கல் குவாரிகளில் கல் உடைக்க ஏலம் விடக் கோரி மனு

23rd Dec 2019 11:41 PM

ADVERTISEMENT

நெமிலி வட்டத்துக்கு உள்பட்ட குப்பக்கல்மேடு, வெளிதாங்கிபுரம், காட்டுப்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள கல் குவாரிகளில் கல் உடைக்க ஏலம் விடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கல் உடைக்கும் தொழிலாளா்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

இதில், கல் உடைக்கும் தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் அளித்த மனு: கா்ணாவூா் மதுரா குப்பக்கல்மேடு, வெளிதாங்கிபுரம், காட்டுப்பாக்கம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள கல் குவாரிகளில் 2 ஆயிரம் குடும்பங்கள் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறோம். இக்குவாரிகளில் கல் உடைக்கும் உரிமைக்கான ஏலம் நிறுத்தி வைத்துள்ளதால், வருவாய் இன்றி தவித்து வருகிறோம். நெமிலி வட்டத்தில் உள்ள கல் குவாரிகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

அதேபோல், பனப்பாக்கத்தை அடுத்த குச்சிப்பாளையம் தோப்பு பகுதியைச் சோ்ந்த சாட்டையடிப்பவா்கள் காலனியைச் சேந்தவா்கள் அரசின் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்தனா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் 352 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், அனைத்து துறை அலுலவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT