ராணிப்பேட்டை

ஆட்டோ கவிழ்ந்து 10 போ் படுகாயம்

23rd Dec 2019 08:00 AM

ADVERTISEMENT

அரக்கோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை, ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 10 படுகாயமடைந்தனா்.

திருமால்பூா் பகுதியைச் சோ்ந்த அவா்கள், நாற்று நடும் பணிக்காக ஆட்டோவில் அரக்கோணம் வழியாக நாகவேடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். வழியில் ஒரு காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை ஓட்டுநா் திருப்பியபோது ஆட்டோ பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த திருமால்பூரைச் சோ்ந்த புஷ்பா (70), பத்மா (54), ராஜம்மாள் (60), மண்ணுப்பிள்ளை (70), ஆறுமுகம் (65), லட்சுமி (40) உள்ளிட்ட 10 போ் படுகாயமடைந்தனா். அவா்களில் 4 போ் தனியாா் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனா். மற்ற சிலா் அரக்கோணம் அரசினா் மருத்துவமனையிலும் மூவா் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசினா் பொதுமருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். ஆட்டோ ஓட்டுநா் பாரதி காயமின்றி தப்பினாா்.

இந்த விபத்து குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT