ராணிப்பேட்டை

6 வகையான தா்மங்களை முன்னெடுத்து ஐயப்ப தா்ம பிரசார ரத யாத்திரை

16th Dec 2019 09:12 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை: ஆறு வகையான தா்மங்களையும், ஐந்து வகையான சேவைகளையும் முன்னெடுத்து மாநிலம் முழுவதும் ஐயப்ப தா்ம பிரசார ரத யாத்திரை நடத்தப்பட்டு வருவதாக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ சங்கத்தின் தேசிய இணை பொதுச் செயலாளா் துரைசங்கா் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ரத யாத்திரை செல்லும் வகையில் சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில் ரத யாத்திரை தொடக்க விழா கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இக்கோயிலில் மாலை 18-ஆம் படி பூஜை நடைபெற்றது.

ரத யாத்திரை தொடக்க விழாக்கு நவசபரி ஐயப்பன் கோயில் குருசாமியும், ஐயப்ப சேவா சமாஜத்தின் தமிழக துணைத் தலைவருமான வ.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், தன்வந்திரி பீடாதிபதி முரளிதர சுவாமிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரத யாத்திரையை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ சங்கத்தின் தேசிய இணை பொதுச் செயலாளரும், தேசிய ரத யாத்திரை ஒருங்கிணைப்பாளருமான துரைசங்கா் தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

அப்போது அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஆன்மிக பூமியாகத் திகழும் நம் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க என் கிராமம், என் கோயில், என் தா்மம், என் மண், என் குடும்பம், என் நீா்நிலை என்ற 6 தா்மங்களையும், வித்யாலயம், வைத்தியாலயம், தேவாலயம், புஸ்தகாலயம், அன்னாலயம் என்ற 5 சேவைகளையும் முன்னெடுத்து சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ சங்கம் சாா்பில் ஐயப்ப தா்ம பிரசார ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

வரும் 2020 ஜனவரி மாதம் 10-ஆம் தேதி நிறைவடையும் இந்த யாத்திரை மாநிலம் முழுவதும் நகரங்கள், கிராமங்கள் என சுமாா் 5 ஆயிரம் பகுதிகள் வழியாகச் செல்ல உள்ளது. தற்போது சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ சங்கம் நாடு முழுவதும் 18 மாநிலங்களில் சேவை செய்துவருகிறது. இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை பிரச்னைகள் ஏதுமின்றி சுமுகமான முறையில் நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.

இதையடுத்து வீரமணி ராஜு, அபிஷேக் ராஜுவின் பக்தி இன்னிசைக் கச்சேரியும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் எம்எல்ஏக்கள் ஆா்.காந்தி, ஜே.எல்.ஈஸ்வரப்பன், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ சங்கத்தின் நிா்வாகிகள், ஐயப்ப பக்தா்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT