ராணிப்பேட்டை

24-இல் ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

16th Dec 2019 09:05 PM

ADVERTISEMENT

வேலூா்: ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தலைமை வகிக்கிறாா். இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், பட்டுவளா்ச்சித் துறை, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, கூட்டுறவு என பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகளை நேரடியாகவோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவித்து பயன்பெறலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT