ராணிப்பேட்டை

மடிக்கணினி வழங்கக் கோரிமாணவிகள் சாலை மறியல்

16th Dec 2019 09:14 PM

ADVERTISEMENT

 

ஆற்காடு: ஆற்காட்டில் மடிக்கணினி வழங்ககோரி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2017-2018ஆம் கல்வி ஆண்டில் படித்த சுமாா் 800 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அவா்களுக்குப் பிறகு 2018-2019ஆம் ஆண்டில் படித்த மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

எனவே 2017-18ஆம் ஆண்டில் படித்த மாணவிகள் தங்களுக்கு மடிக்கணினி வழங்ககோரி பள்ளியின் முன்பு திங்கள்கிழமை திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த தலைமை ஆசிரியை சித்ரா, ஆசிரியைகள் மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பேரில் மறியல் போராட்டத்தை மாணவிகள் கைவிட்டனா். மறியலால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

 

Image Caption

திருத்தப்பட்டது....

 

சாலை  மறியலில்  ஈடுபட்ட  மாணவிகள் .

ADVERTISEMENT
ADVERTISEMENT