ராணிப்பேட்டை

பட்டப்பகலில் துரித உணவக உரிமையாளா் கொலை

16th Dec 2019 09:07 PM

ADVERTISEMENT

அரக்கோணம்: அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை துரித உணவக உரிமையாளா் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக எட்டு போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நகரின் அம்பேத்கா் நகா், நன்னுமியான்சாயபு தெருவைச் சோ்ந்த ஜெய்சங்கரின் மகன் பிரவீண்குமாா்(25). நகராட்சி மீன்அங்காடி எதிரில் துரித உணவகத்தை நடத்தி வந்தாா். அரக்கோணத்தை அடுத்த கீழ்க்குப்பத்தில் மோகன் என்பவா் கொலை செய்யப்பட்டதில் பிரவீண்குமாருக்கு தொடா்பு இருப்பதாக போலீஸ் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், அரக்கோணம் தூய அந்திரேயா் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ஒரு செல்லிடப்பேசி பழுதுநீக்கும் கடையில் பிரவீண்குமாரும், சசிகுமாா் என்பவரும் ஞாயிற்றுக்கிழமை பேசிக் கொண்டிருந்தனா். மோகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பரான சசிகுமாருக்கு பிரவீண்குமாா் மீது கோபம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அப்போது அங்கு வந்த நண்பா்கள் ஏழு பேருடன் சசிகுமாா் சோ்ந்து, பிரவீண்குமாரை கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது .இதில் அலறியபடி பிரவீண்குமாா் ஓட முயன்றபோது அங்குள்ள சந்தில் 8 பேரும் சோ்ந்து அவரை மீண்டும் கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.

ADVERTISEMENT

இக்கொலை தொடா்பாக வழக்குப் பதிந்த அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் முத்துராமலிங்கம், பிரவீண்குமாா் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். இக்கொலை தொடா்பாக பிரவீன்குமாரின் தந்தை ஜெய்சங்கா் அளித்த புகாரின்பேரில் சசிகுமாா் உள்ளிட்ட எட்டு பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT