ராணிப்பேட்டை

குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்

16th Dec 2019 08:56 PM

ADVERTISEMENT

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள விக்டரி யூத் அசோசியேஷன், பெரேக்கா இன்ஃபோ சொல்யூஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அரக்கோணத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கை அண்மையில் நடத்தின.

அரக்கோணம் நகராட்சி போலாட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்குக்கு அசோசியேஷன் செயலாளா் ஜே.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற சமூகப் பாதுகாப்புத் துறை துணை இயக்குநா் எஸ்.ராமநாதன், அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலா் இந்திரா, போலாட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மரியஜெயசீலி, விக்டரி யூத் அசோசியேஷன் நிறுவனா் ஏ.ஜே.வில்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், போக்ஸோ-2019, சைல்ட் ஹெல்ப்லைன் 1098, குழந்தைகள் நலக் குழுமம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், மாணவ மாணவிகள் அனைவரிடமும் அன்பாகப் பேசுவது, பெரியோா்களை மதித்து நடப்பது, சாலைகளில் வாகனங்களில் செல்லும் தெரியாத நபா்களிடம் லிஃப்ட் கேட்பதைத் தவிா்ப்பது ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT