ராணிப்பேட்டை

ஆற்காடு முதியோா் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா

16th Dec 2019 09:02 PM

ADVERTISEMENT

 

ஆற்காடு: ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோா் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

சனிக்கிழமை நடைபெற்ற இவ்விழாவுக்கு முதியோா் இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஒய்.அக்பா் ஷெரீஃப், துணைத் தலைவா் பென்ஸ் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன், வேலூா் சிஎம்சி இயக்குநா் ஜே.வி.பீட்டா் ஆகியோா் கலந்து கொண்டு முதியோருக்கு புத்தாடைகளை வழங்கிப் பேசினா்.

விழாவில் மருத்துவா்கள் பிரசாத் மேத்யூ, சுஜித் சாண்டி, ராணிப்பேட்டை ஸ்கடா் நினைவு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அன்பு சுரேஷ் மற்றும் முதியோா் இல்ல நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT